Manually operated electronic fire alarm system

தேசிய கட்டிடக் குறியீடு 2016 ன் படி, manual fire alarm என்பது manual call point மற்றும் sounder beacon ஆகியவை மட்டுமன்றி public address system, talkback system ஆகியவை சேர்த்து இருக்கின்றனர். மற்றும் ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை வழிநடத்தத் தேவையான தகவல்களை தமிழிலோ/ஆங்கிலத்திலோ பேசி முன்பதிவு செய்து fire alarm உடன் இணைத்து இயக்கி வெளியேற உதவும் அம்சங்களை கொண்டக் கட்டமைப்பாக இருக்க வேண்டும்.

தேசிய கட்டிடக் குறியீடு 2016 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் பூர்த்தி  செய்யும் வகையில் பாகங்களை வடிவமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.

இந்த அம்சங்கள் NBC 2016 ஆல் தற்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் நிறுவனம் ஏற்கனவே  Indian Airforce  கட்டடங்களில் இந்த அம்சங்களை கொண்ட கட்டமைப்பை அமைத்து பராமரித்து வருகிறது.

Manual Call Point

தீ விபத்தை அறிவிக்க உதவும் கட்டமைப்பிற்கு உறுதியான தகவலை தெரிவிக்க பயன்படும் கருவி.

TALKBACK UNIT

ஆபத்தில் இருப்பவர்களும் மீட்பு பணியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவும் மற்றும் தீ யணைப்பு வீரர்களும் அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளும் பேச உதவும் கருவி. அதிவொலி பேசி ( talkback speaker) என்பது ஒலி பெருக்கி ( speaker ) மற்றும் அதிதிறன் ஒலி வாங்கி( high sensitive microphone) ஒன்றிணைந்த கருவியின் பெயர் . இந்த மின்னனு கருவிகளை அடுக்கு மாடி கட்டிடங்களில் ஒவ்வொரு தளத்திலும் பொருத்தி மின்கடத்தி ( electric cable) மூலம் ஒருங்கிணைத்து தரை தளத்தில் உள்ள கட்டுப்பாட்டு்க்கருவியில் ( control panel) இணைக்கப்பட்டிருக்கும் அமைப்பின்பெயர் அதிவொலி பேசி அமைப்பு ( Talkback system) . எதிர்பாரமல் தீ விபத்து ஏற்படும் நேரங்களில் மேல் தளங்களில் சிக்கியுள்ள மக்களுக்கும் தரை தளத்தின் கட்டுப்பாட்டு அறையில் உள்ள உதவியாளர்களை ஒருங்கிணைக்கும் இந்த அமைப்பு மிக உதவியாக இருக்கும் . தேசியகட்டிட விதி 2016 ( NBC 2016 ) இந்த அமைப்பை பொருத்த வலியுருத்துகிறது . அதிவொலி பேசியின் அதிதிறன் ஒலி வாங்கும் ( high sensitive mic) திறனின் தேவை முக்கியமான ஒன்று . ஒரே நேரத்தில் ஐந்திற்கும் மேறபட்ட நபர்கள் நின்றுபேசுவதை இரண்டு அடி மற்றும் மேலும் தூரமாக பொருத்தப்பட்ட சாதரண ஒலிவாங்கிக்கு திறன் கிடையாது . எனவே இதற்க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்ட்ட அதி திறன் கொண்ட ஒலி வாங்கியால மட்டும் சாத்தியம். இந்த கருவியில் உள்ள ஒலிபெருக்கி அங்கு குழுமியிருக்கும் நபர்கள் நன்கு கேட்கும் அளவிற்கு
சப்தமாக ஒலி எழுப்பும் . இந்த கருவியில் பொருத்தப்பட்ட சுவிட்சை அழுத்தினால் கட்டுபாட்டு அறையின் கருவி அழைப்பிற்கான ஒலி அதிர்வை ஏற்படுத்தி , கருவியின் திரை மூலம் அழைப்பவரின் தளம் எண் indicate செய்து தொடர்பபை ஏற்படுத்தி கொடுக்கும் . அது போல கட்டுப்பாட்டு அறையின் கருவியிலிருந்து எந்த தளத்தின் அதிவொலி பேசியினையும் இயக்கி அங்கு உள்ளவர்களின் பேசுவதை கேட்க இயலும் . தீ மற்றும் உயிர் பாதுகாப்பின் உபயோகத்திற்கான அதிவொலி அமைப்பு என்பதால் , இதன் வடிவமைப்பு , Fire safety standards சார்ந்து இருக்கவேண்டும் . ஏனெனில் தீ ஏற்படும் பொழுது இந்த அமைப்பிற்கான வயர்கள் சேதமாகாத வட்டம் இருக்க வேண்டும் . இந்த அமைப்பு தன்னை தானாகவே தன் செயல்பாடுகளை கண்கானித்து , ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் உதாரணமாக ஏதாவது கருவி அமைப்பின் தொடர்பிலிருந்து துண்டிக்கபடாலோ , இதற்க்கான வயர் துண்டிக்கப்பட்டாலோ short circuit ஆனாலோ கட்டுபட்டு கருவி alert and indicate செய்ய வேண்டும் 

SOUNDER BEACON

ஆபத்தில் இருப்பவர்களுக்கும் மீட்பு பணியாளர்களுக்கும் அபாய ஒலி கொடுக்க உதவும் கருவி. இக்கருவி திடீரென்று ஒலி எழுப்பி தேவையற்ற அதிர்ச்சியை உண்டு பண்ணாமல் சப்தத்தின் அளவு சிறிது,சிறிதாக உயர்த்தி முழுஅளவு சப்தம் வருமாறு அமைக்கப்பட்டிருக்கும் மற்றும் இதில் உள்ள LED FLASHER ஒளி எழுப்பி அபாயத்தை உணர்த்துகிறது.

beep SOUNDER BEACON

ஆபத்தில் இருப்பவர்களுக்கும் மீட்பு பணியாளர்களுக்கும் அபாய ஒலி கொடுக்க உதவும் கருவி. இது எழுப்பும் ஒலி,அமைதியான,சூழல் மற்றம் அறிவார்ந்த மக்கள் இருக்கும் இடத்தில் மென்மையான முறையில் வெறும் பீப் சப்தம் ஒலித்து அபாயத்தை உணர்த்த உபயோகிக்கும் கருவி.மற்றும் இதில் உள்ள LED FLASHER ஒளி எழுப்பி அபாயத்தை உணர்த்துகிறது.

Fire Alarm Control Panel

தீ உருவாவதை அறிந்து அபாய வலையில் சிக்கியுள்ள மக்களை முறையாக எச்சரிக்கை செய்யயும் கட்டமைப்புக்கு முக்கிய மூளையாக செயல்படும் கருவி.
இக்கருவியின் முலம் ஆபத்திற்கு உள்ளாயிருக்கும் பகுதியினை காண இயலும் , மற்றும் இக்கருவி தானாகவே எந்த பகுதியில் இருப்பவர்களை எச்சரிக்கை வேண்டுமோ அவர்களை மட்டுமே எச்சரிக்கும். மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு கொடுக்காது.
மீட்பு குழுவினர் அங்குள்ள speaker மற்றும் talkback unit ஐ தன் கட்டுக்குள் கொண்டு வந்து சூழலுக்கு தகுந்தாற் போல் ஆபத்தில் இருப்பவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை இயக்க உதவும் கருவி.

LPG Leak Detection And Alarm System

LPG – Liquid petroleum Gas வீடு , hotel மற்றும் தொழிற்சாலைகலில் உபயோகிக்கப்படுகிறது . இந்த வாயு கசிந்தால் பெரிய explosion நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த LPG என்பது திரவம் இதனுடன் கெட்ட வாசனை திரவியம் கலக்கப்பட்டிருக்கும் .
LPG கசிவு ஏற்படும் போது இதன் வாசனை வெளிப்படும் , அதன் மூலம் அதன் அருகில் இருப்போர் கசிவை அறிந்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள் . LPG leak ஏற்படும் போது , அது காற்றில் கலந்துவிடும் . இந்த gas காற்றில் கலந்தாலும் இதில் உள்ள ஈரப்பதம் இந்த gas ஐ மேல் செல்லாமல் தரையில் படிய வைக்கிறது . இந்த gas நிறைந்த இடத்தில் ஒரு spark கிடைத்தால் explosion ஏற்படுகிறது . இந்த LPG gas மற்றும் காற்றில் உள்ள oxygen அளவை பொருத்து explosion அளவு மாறும் . இதை LEL மற்றும் HEL அதாவது Low explosion level and High explosion level. LPG leak detector எனபது LPG மற்றும் oxygen mixture level ஐ அளந்து control panel க்கு signal செய்யும் . Low explosion level இருக்கும் போது gas explode ஆகாது , அந்த சமயத்திலேயே automatic LPG detector கசிவை அறிந்து Alarm கொடுக்கும் . இதன் மூலம் பாதுகாப்பை அதிகரிக்கலாம் . LPG detector fix செய்யும் பொழுது தரையில் இருந்து ஒரு அடி உயரத்தில் பொருத்தப்பட வேண்டும் . இந்த detector பல மாடல்களில் கிடைக்கும் . Standalone LPG detector- இது plastic enclosure ல் கிடைக்கும் . இது வீட்டில் உள்ள kitchen ல் பொருத்தலாம் . Flame proof LPG leak detector, இது hotel kitchen, LPG bank , hospital, cloud kitchen, industry ல் பொருத்தலாம்.

others in series

Automatic Fire Detection And Alarm System

LPG Leak Detection And Alarm System