Automatic Fire detection and alarm system

தீ உருவாவதை அறிந்து அபாய வலையில் சிக்கியுள்ள மக்களை முறையாக எச்சரிக்கை செய்யயும் கட்டமைப்புக்கு முக்கிய மூளையாக செயல்படும் கருவி. இக்கருவியின் முலம் ஆபத்திற்கு உள்ளாயிருக்கும் பகுதியினை காண இயலும் , மற்றும் இக்கருவி தானாகவே எந்த பகுதியில் இருப்பவர்களை எச்சரிக்கை வேண்டுமோ அவர்களை மட்டுமே எச்சரிக்கும். மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு கொடுக்காது.
மீட்பு குழுவினர் அங்குள்ள speaker மற்றும் talkback unit ஐ தன் கட்டுக்குள் கொண்டு வந்து சூழலுக்கு தகுந்தாற் போல் ஆபத்தில் இருப்பவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை இயக்க உதவும் கருவி.
Smoke Detector
Smoke detector calibration
உங்களுக்கு தெரியுமா ? smoke detector ஆயுட்காலம் மிக மிக குறைவு . சில மாதங்களே.நம்ப முடிகிறதா.Automatic fire detection and alarm system என்றாலே smoke detector . இதன் முக்கியத்துவம் நமக்கு அறிந்த விஷயம்.Smoke detector எப்படி வேலை செய்கிறது என்பதை அறிந்தால் உங்களுக்கு புரியும் .Smoke detector, இதில் இருண்ட அறை( smoke chamber ) உள்ளது . இந்த அறை முழு கருப்பு வண்னத்தில் இருக்கும் . இந்த அறையின் ஒரு புறம் ஒளியை அளவிடும் sensor , மறுபுறம் ஒளிவிற்கும் LED பொருத்தப்பட்டிருக்கும் . இந்த LED மற்றும் Light sensor ஒன்றுக்கொன்று பாரக்காவன்னம் சிறிய தடுப்பு அமைந்திருக்கும் .இந்த smoke chamber ல் வெளியிலிருந்து வெளிச்சம் வராதமாதிரியும் , அதே சமயம் காற்று வந்து செல்கிறமாதிரி வடிவமைக்கபட்டிருக்கும் .இந்த LED light எரிந்தாலும் smoke chamber ல் வெளிச்சம் இருக்காது , காரணம் chamber உட்புறம் முழுவதும் கருப்பு கலர் என்பதால் .ஒருவேளை smoke காற்றின் மூலமாக smoke chamber க்கு உள்ளே சென்றாள் LED light புகை மீது பட்டு அந்த chamber வெளிச்சம் பெறும் . இந்த வெளிச்சத்தின் அளவு அந்த இடத்தின் புகையின் அளவு . இந்த அளவை வைத்து Fire Alarm இயக்கப்படும் .நமக்கு நன்கு தெரியும் LED light ஆரம்பத்தில் தரும் வெளிச்சம் நாளடைவில் தருவதில்லை . LED ஒளிரும் தன்மையை இழப்பதால் Smoke sensor அதன் திறனை இழந்து மிக அதிகமான புகை வந்தால் மட்டும் இயங்கும் இல்லை இயங்காது . இந்த செயல் இழந்த smoke detectors புதுப்பிக்க வேண்டும் ( calibration) . இரண்டு வருடத்திற்கு ஒரு முறை சோதனை செய்து , sensitivity அளவிற்கு கீழ் இருந்தால் புதிர்பிக்க வேண்டும் அல்லது புதிய smoke detector பொருத்தப்பட வேண்டும் . அகர்பத்தி புகையை வைத்து smoke detector திறன் அளவிட முடியாது எனவே உறபத்தியாளர் மட்டுமே இந்த வேளை செய்ய முடியும் .Smoke detectors calibration பற்றி மிக தெளிவாக IS 2189 தெளிவாக கூறியுள்ளது.

Multisensor With Sounder
அசாதரன வெப்பத்தை அல்லது புகையை உணர்ந்து தீ எச்சரிக்கை (FIRE ALARM) அமைப்பிற்குத் தானாகவே தகவலை அனுப்ப உதவும் கருவி. இதன் உடன் உள்ள BEEP SOUNDER அபாய ஒலியை எழுப்பப் பயன்படுகிறது.